கோவையில் ஓடும் பஸ்சில் ஆசிரியை உள்பட 2 பேரிடம் செயின் பறிப்பு
- ராணி சிங்காநல்லூரில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார்.
- 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி ராணி (வயது 52). ஆசிரியை.
சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் உக்கடம் வந்ததும் ராணி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் ஆசிரியை கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ராணி உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையிடம் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
போத்தனூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தமிழ்செல்வி (56). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சுந்தராபுரம் குறிச்சி பிரிவில் இருந்து டவுன் ஹாலுக்கு பஸ்சில் வந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் தமிழ்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்மநபரை ேதடி வருகிறார்கள்.