உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-02-11 12:52 IST   |   Update On 2023-02-11 12:52:00 IST
  • புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகில் உள்ள ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கயல்விழி (வயது23) என்பவ ருக்கும் முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் சுயஉதவிக்குழுவுக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கயல்விழி தனக்கு திருமணத்தில் சந்தோசம் இல்லை என்றும், கவலையாக உள்ளது எனவும் கூறி வந்துள்ளார்.

அதன் பிறகு தனது அறைக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ேதவாரம் அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த கார்த்திக் மனைவி ரூபினி (22). கார்த்திக் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வாடகைக்கு சென்று விட்டார். அப்போது ரூபினி தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவிக்க கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை.

இதனால் மனமுடைந்த ரூபினி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துஅவரது தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News