உள்ளூர் செய்திகள்

உடன்குடி பஸ் நிலையம் அருகே உள்ள 2 மதுபான கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை

Published On 2023-05-07 08:11 GMT   |   Update On 2023-05-07 08:11 GMT
  • மது பிரியர்கள் செய்யும் இடையூறுகள் சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
  • இதனால் இந்த 2 மதுபான கடைகளையும் உடன்குடி நகரப் பகுதியை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உடன்குடி:

உடன்குடி பஸ் நிலையம் எதிரில் ஒரு அரசு மதுபான கடையும், வடக்கு பஸ் நிலைய ரோட்டில் ஒரு மதுபான கடையும் பஸ்நிலையம் அருகில் இருப்பது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன் பஸ் நிலையம் வரும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

மேலும் வடக்கு பஸ் நிலைய ரோட்டில் உள்ள மதுபான கடை அருகே ஒரு ஏ.டி.எம். அலுவலகம் இருக்கிறது. மது பிரியர்கள் அடிக்கடி இந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக சொல்லி உடைத்து விடுகிறார்கள். மது பிரியர்கள் செய்யும் இடையூறுகள் சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் பார்வைக்கு பயந்து பள்ளி செல்லும் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெண்கள் பயந்து ஓடும் நிலை உள்ளது. இதனால் இந்த 2 மதுபான கடைகளையும் உடன்குடி நகரப் பகுதியை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும், விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News