உள்ளூர் செய்திகள்

காரமடையில் நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

Published On 2023-03-04 09:46 GMT   |   Update On 2023-03-04 09:46 GMT
  • அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
  • கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோ ட்டம் நாளை மறுநா ள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.இதில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் பெட்டத்தாபுரம், திம்ம ம்பாளையம், மங்களக்கரை புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக காந்திநகர் செல்ல வேண்டும்.

அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் வழியாக தொட்டிபாளையம் பெள்ளாதி, கண்ணார்பா ளையம் வழியாக மத்தம்பா ளையம் செல்லும்.

தேர் திருவிழா நடைபெறும் 6 மற்றும் பந்த சேவை நிகழ்வு நடைபெறும் 7-ந் தேதி ஆகிய இரு தினங்களிலம் இந்த போக்குவரத்து மாற்றமானது இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவை-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்-கோவை செல்லும் வாக னங்கள் இதனை பின்பற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News