உள்ளூர் செய்திகள்

பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தஞ்சை ரெயில் நிலையத்தின் 162-வது ஆண்டு தொடக்க விழா; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2022-12-02 10:06 GMT   |   Update On 2022-12-02 10:06 GMT
  • தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
  • ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தமிழகத்தின் மிகப் பழமையான ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தஞ்சை ரெயில் நிலையம் கடந்த 2-12-1861-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரெயில் சேவை வழங்கி வருகிறது.

இன்றுடன் தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதனை கொண்டாடும் வகையில் இன்று தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பார்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ரெயில்வே சீப் கமர்சியல் இன்ஸ்பெக்டர் மோகன், ரயில்வே நிலைய அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் கண்ணன், வழக்கறிஞர்கள் உமர் முக்தர், முகமது பைசல், பேராசிரியர்கள் திருமேனி, செல்ல கணேசன், பாபநாசம் ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சரவணன், நிர்வாகிகள் சோமநாதராவ், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News