உள்ளூர் செய்திகள்

நடுவூர் கால்நடை பண்ணையில் 12-ந்தேதி காலி தீவன சாக்குபைகள் ஏலம்

Published On 2023-09-02 10:12 GMT   |   Update On 2023-09-02 10:12 GMT
  • மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.
  • ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் காலி தீவன பாலத்தின் சாக்கு பைகள் வருகிற 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை )காலை 11 மணிக்கு பொது ஏலமிடப்பட உள்ளது.

இதில் நல்ல நிலையில் உள்ள 4022 சாக்கு பைகளும் குறைந்த நிலையில் உள்ள 111 சாக்கு பைகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.

ஏலம் கால்நடை பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தனித்தனியாக ஏலத்திற்கான முன் வைப்புத் தொகை ரூ 1000ம் துணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பண்ணை நடுவூர் என்ற பெயரில் வங்கி வரைவோலையாக ஒரத்தநாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும். வரைவோலையுடன் ஆதார் அட்டை ஜெராக்ஸ் பெறப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஏலத்தில் கலந்து கொள்வ தற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படும். வங்கி வரை ஓலைகள் அனைத்தும் 5-ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

ஏல முன்வைப்பு தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையும் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் செலுத்திய முன்வைப்புத் தொகை முழுவதும் இழக்க நேரிடும். ஏலம் விடப்படும் சாக்கு பைகளை துணை இயக்குனர் அல்லது பண்ணை மேலாளர் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ே ஜக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News