உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம். 

ஸ்ரீவைகுண்டம் அருகே நவராத்திரி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

Published On 2022-10-03 09:07 GMT   |   Update On 2022-10-03 09:07 GMT
  • முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
  • 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் தசரா குழுவினர் 38 வருடமாக தசரா திருவிழாவை நடத்தி வருகின்றனர். இங்கு வருடம் தோறும் தசரா திருவிழா மற்றும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி மற்றும் தசரா திருவிழா கால் நாட்டுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினம் தோறும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. 7ம் திருவிழாவை முன்னிட்டு தசரா கூடம் முன்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருமணமான பெண்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடை முத்துமாரியம்மன் தசரா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News