உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு நேர்முகத் தேர்வு

Published On 2023-05-07 15:28 IST   |   Update On 2023-05-07 15:28:00 IST
  • இந்த நேர்முகத் தேர்வில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  • தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

கோவை

108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். இதில் பணியாற்ற இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது.

அதன்படி இன்று நேர்முகத் தேர்வு கோவை ெரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு, நடத்தப்பட்டன.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News