உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பேசினார்.


தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கில் 103 மருத்துவர்கள் பங்கேற்பு

Published On 2022-10-30 08:03 GMT   |   Update On 2022-10-30 08:03 GMT
  • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கு நடைபெற்றது
  • அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.

தென்காசி:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் என சுமார் 103 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவர் சுவர்ணலதா அனைவரையும் வரவேற்றார். மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றி விளக்கிக் கூறினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியர் அனிதா காந்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் பொது பிரிவு உதவி பேராசிரியர் காந்திமதி பத்மநாபன், தென்காசி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஜெரின் இவாஞ்சலின், விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக் ஆகியோர் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினர்.

கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து பேச்சாளர்களையும் கலந்துகொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார்.

கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் மல்லிகா மற்றும் பயிற்சி மருத்துவர் பிரியதர்ஷினி இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். உறைவிட மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் மருத்துவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் 2 மணித்துளி மதிப்பெண்களும், பேச்சாளர்களுக்கு 3 மணித்துளி மதிப்பெண்களும் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News