உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சை மாவட்டத்தில் கனமழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு- கலெக்டர் தகவல்

Published On 2022-11-04 10:07 GMT   |   Update On 2022-11-04 10:07 GMT
  • மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் ஆய்வு.
  • தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

அப்போது தண்ணீர் வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பருவமழையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News