உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி நடுமேட்டுக்குப்பத்தில் மாண்டஸ் புயல்காரணமாக 100 ஆண்டு பழமைவாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது

பண்ருட்டியில் மாண்டஸ் புயல் காரணமாக 100 ஆண்டு பழமைவாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது

Published On 2022-12-10 07:07 GMT   |   Update On 2022-12-10 07:07 GMT
  • கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
  • கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவுகாற்றுடன் கன மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவாக பண்ருட்டியில் 36 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

காற்றுடன் கூடிய கன மழைபெய்ததால் பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்வளாகத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான வேப்பமரம் ஒன்றுவேரோடு சாய்ந்து விழுந்தது இதனால் நேற்று இரவு அங்கு நடந்த ஐயப்பபக்தர்கள் கன்னி பூஜைக்காக போடப்பட்டிருந்த பிரம்மா ண்டமான கொட்டகை கிழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது 

Tags:    

Similar News