உள்ளூர் செய்திகள்

வடலூர் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வில் சாதனை புரிந்த மாணவிகளை பள்ளி நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அருகில் பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ்.

வடலூர் எஸ்.டி ஈடன் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபிளஸ்-2 தேர்வில் அபாரம்

Published On 2023-05-09 08:12 GMT   |   Update On 2023-05-09 08:12 GMT
  • வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
  • தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூர்:

வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வடலூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.  இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News