உள்ளூர் செய்திகள்

100-நாள் வேலை திட்டத்தில் முறைகேடு : அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-07-20 09:57 GMT   |   Update On 2023-07-20 09:57 GMT
  • ெபாதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் அரசு பஸ்சை மடக்கி சிறை பிடித்தனர்.
  • சாலையில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 4 மணிநேரம் நடந்தது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடவம்பாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ெபாதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் அரசு பஸ்சை மடக்கி சிறை பிடித்தனர். மேலும் அரசு பஸ்சை சிறை பிடித்து 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேட்டிற்கு எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து எங்களிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றனர். மேலும் சாலையில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 4 மணிநேரம் நடந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News