உள்ளூர் செய்திகள்
தென்காசியில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
- பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகர் புரத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரது மனைவி மங்கையர்கரசி.
- பிரபல ஜவுளி கடையில் துணி எடுப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்புவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகர் புரத்தைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரது மனைவி மங்கையர்கரசி (வயது 54).
இவர் நேற்று மாலையில் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஜவுளி கடையில் துணி எடுப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்புவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் மங்கையர்கரசி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை திடீரென பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான்.
இதுகுறித்து அந்த பெண் தென்காசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.