உள்ளூர் செய்திகள்
வாழப்பாடி அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை கொள்ளை
- செல்லம்மாள் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், வீட்டை தாழிட்டு விட்டு, பால் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றார்.
- வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், வீட்டை தாழிட்டு விட்டு, பால் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றார்.
மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன செல்லம்மாள், இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.