உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் நீட் தேர்வு எழுதும் மாணவிகள் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு

Published On 2022-07-17 08:56 GMT   |   Update On 2022-07-17 08:56 GMT
  • கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.
  • மாணவிகளுக்கு கம்மல்,மூக்குத்தி, வளையல் அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

கடலூர்:

நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் 18.72 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் புனிதவளனார் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் இந்த தேர்வுநடக்கிறது. அதாவது கடலூரில் 4 மையம், நெய்வேலியில் 2 மையம், விருத்தாசலத்தில் 1 மையத்தில் இன்று மதியம் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வையொட்டி மாணவ- மாணவிகள் காலை 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பரவி வருவதால் முக கவசம் அணிந்த வர கட்டாயமாக்கப்பட்டது. அதோடு மாணவ- மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டது/ மாணவிகளுக்கு கம்மல்,மூக்குத்தி, வளையல் அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News