செய்திகள்

இந்தியாவில் நிசான் இந்தியா கார் விலை மாற்றம்

Published On 2018-12-14 10:57 GMT   |   Update On 2018-12-14 10:57 GMT
நிசான் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மாற்றுவதாக தெரிவித்துள்ளது. #Nissan



நிசான் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஜனவரி 2019 வாக்கில் நான்கு சதவிகிதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் உதிரிபாகங்களின் விலை அதிகரித்து இருப்பதால் கார் மாடல்களின் விலை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிசான் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய விலை அதிகரிப்பு காரணமாக நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகமாகிறது.



இந்தியாவில் கார் மாடல்களின் விலை அதிகரிக்க இருப்பதாக ஏற்கனவே மாருதி சுசுகி, ஹூன்டாய், ரெனால்ட், டாடா, பி.எம்.டபுள்யூ. உள்ளிட்ட நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 

அடுத்த மாதத்தில் கார் மாடல்களின் விலை அதிகரிக்க இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்து இருந்தாலும், தற்சமயம் சில நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. 

அந்த வரிசையில் நிசான் இந்தியா நிறுவனமும் தனது மைக்ரா ஆக்டிவ் மற்றும் டெரானோ மாடல்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குகிறது.
Tags:    

Similar News