செய்திகள்

20 சதவிகித விற்பனை வளர்ச்சி பெற்று அசத்தும் டொயோட்டா

Published On 2018-06-01 10:51 GMT   |   Update On 2018-06-01 10:51 GMT
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மே மாத இந்திய விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மே மாத விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே மாதம் மாட்டும் டொயோட்டா நிறுவனம் 13,940 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 13,113 யூனிட்கள் இந்தியாவிலும், 827 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனம் 10,914 யூனிட்களை உள்நாட்டிலும் 1,425 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அந்த வகையில் இந்நிறுவனம் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

"மே 2018 மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களை தொடர்ந்து யாரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் என். ராஜா தெரிவித்தார்.



இந்தியாவில் மே மாத துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் எனும் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்தது. மே மாத இறுதி வரை மட்டும் டொயோட்டா நிறுவனம் 4000 யாரிஸ் யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. 

இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News