செய்திகள்

மஹேந்திரா TUV300 T10 இந்தியாவில் வெளியானது

Published On 2017-09-23 16:36 IST   |   Update On 2017-09-23 16:36:00 IST
மஹேந்திரா நிறுவனத்தின் TUV300 T10 மாடல் இந்தியாவில் வெளியானது. புதிய TUV300 T10 விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

மஹேந்திரா TUV300 T10 இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய TUV300 T10 விலை ரூ.9.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ.10.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய மஹேந்திரா TUV300 T10 மொத்தம் T10, T10 டூயல்-டோன், T10 AMT, T10 AMT டூயல் டோன் என நான்கு மாடல்களில் கிடைக்கிறது. TUV300 மாடல்களில் அலாய் வீல், பின்புற ஸ்பாய்லர் மற்றும் பிளாக் க்ரோம் மற்றும் முன்பக்க ஃபாக் லேம்ப் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஹெட்லேம்ப் கவர், ரூஃப் டெயில், அலாய் வீல் மற்றும் டெயில்கேட் ஸ்பேர் வீல் கவர் உள்ளிட்டவை மெட்டாலிக் கிரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. உள்புற கேபினில் லெதர் சீட் மற்றும் ஓட்டுநர் இருக்கையை வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 



மேலும் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட மேப்ஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் மஹேந்திரா புளூ சென்ஸ் ஆப் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை மஹேந்திரா TUV300 T10 மாடலில் டூயல் முனப்க்க ஏர்பேக், ABS, EBD, ISOFIX மவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக்100 டீசல் இன்ஜின் 100bhp மற்றும் 240Nm செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எனினும் AMT கியர்பாக்ஸ் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.   

மஹேந்திரா TUV300 T10 ஆறு சிங்கிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் TUV300 மாடல் மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News