வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : மீண்டும் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Published On 2025-10-30 09:45 IST   |   Update On 2025-10-30 09:47:00 IST
  • நேற்று பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது.
  • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 சரிந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து காணப்பட்டது.

கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த சூழலில், மேலும் விலை குறையும் என நேற்று எதிர்பார்த்த பலருக்கு தங்கம் விலை அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனையான நிலையில், நேற்று காலை மற்றும் பிற்பகல் 2 வேளைகளில் விலை உயர்ந்து இருந்தது.

காலையில் கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 325-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600

28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600

27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

29-10-2025- ஒரு கிராம் ரூ.166

28-10-2025- ஒரு கிராம் ரூ.165

27-10-2025- ஒரு கிராம் ரூ.170

26-10-2025- ஒரு கிராம் ரூ.170

25-10-2025- ஒரு கிராம் ரூ.170


Tags:    

Similar News