Stock market today: 7 நாட்களுக்குப் பிறகு சரிவை சந்தித்த பங்குச் சந்தை
- சென்செக்ஸ் 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி கடந்த 7 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்சென்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 520.90 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 4 மாதங்களுக்குப்பின் மீண்டும் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்த 80116.49 புள்ளிகளாக இருந்தது.
இன்று காலை வர்த்தகம் 80,058.43 புள்ளிகளுடன் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,173.92 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 79,724.55 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்.சி.எ். டென்னாலாஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடக் மகந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்தூஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவன பங்கு 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.