வணிகம் & தங்கம் விலை

பங்கு சந்தை: ஒரு வார உயர்விற்கு பின்பு கடுமையாக சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி

Published On 2025-03-26 16:20 IST   |   Update On 2025-03-26 16:20:00 IST
  • சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.
  • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,966.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

அதன்பின் இறங்குவதுமாகவே சென்செக்ஸ் இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,194.22 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 78,167.87 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 728.93 புள்ளிகள் சரிந்து 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 6 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது.

நேற்று நிஃப்டி 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,685.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

அதன்பின் இறங்குவதுமாகவே நிஃப்டி இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,451.70 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,736.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 181.80 புள்ளிகள் சரிந்து 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 41 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 9 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

Tags:    

Similar News