வணிகம் & தங்கம் விலை

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 368.40 புள்ளிகளும், நிஃப்டி 98.10 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவு

Published On 2025-01-01 16:25 IST   |   Update On 2025-01-01 16:25:00 IST
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி பங்குகள் உயர்வு.
  • இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவு.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 368.40 புள்ளிகள் உயர்வுடனும், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்வுடனும் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளுடன் நேற்று நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு சுமார் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,265.07 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. அதன்பின் மெல்லமெல்ல உயர்ந்து கொண்டே சென்றது. காலை 11.20 மணியளவில் 78,610 புள்ளிகளை தொட்டது. அதன்பின் 12 மணியளவில் 78,320 புள்ளிகளுக்கு சரிந்தது. பின்னர் ஏற்றம் கண்டு முடிவில் 368.40 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 78,507.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று குறைந்த பட்சமாக 77898.30 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 78756.49 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

நிஃப்டி

இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,644.80 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை ஏழு புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,637.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 10 மணியளவில் 23,569 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதன்பின் நிஃப்டி உயர ஆரம்பித்தது. இறுதியாக நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,742.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று நிஃப்டி அதிக பட்சமாக 23,822.80 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக நிஃப்டி 23,562.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

உயர்வை சந்தித்த பங்குகள்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மசெயுட்டிகள், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கேடக் மஹிந்திரா பேங்க், மாருதி சுசிகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்சிஸ் பேங்க், டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

சரிவை சந்தித்த பங்குகள்

இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

Tags:    

Similar News