வணிகம் & தங்கம் விலை

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 930 புள்ளிகளும், நிஃப்டி 345 புள்ளிகளும் சரிவு

Published On 2025-04-04 18:08 IST   |   Update On 2025-04-04 18:08:00 IST
  • Sensex tumbles 930.67 points to close at 75,364.69; Nifty declines 345.65 points to 22,904.45
  • நிஃப்டி நேற்று 166.65 புள்ளிகளும், இன்று 345.65 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நிறைவு.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக நேற்றும் இன்றும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்று (புதன்கிழமை) சென்செக்ஸ் 322.08 புள்ளிகளும், நிஃப்டி 166.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,295.36 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 130 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 76,258.12

புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இறுதியாக 930.67 புள்ளிகள் சரிவை சந்தித்து 75,364.69 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 23,250.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 60 புள்ளிகளில் சரிந்து 23,190.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 23,214.70 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 22,857.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 345.65 புள்ளிகள் சரிந்து 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags:    

Similar News