வணிகம் & தங்கம் விலை
null

GOLD PRICE TODAY : ஒரே நாளில் 2 முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Published On 2025-11-19 16:19 IST   |   Update On 2025-11-19 18:28:00 IST
  • இன்று காலை சவரனுக்கு ரூ.800 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.800 கூடியது.
  • தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ1,120-ம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 2-வது முறையாக மீண்டும் உயர்ந்தது. இன்று காலை சவரனுக்கு ரூ.800 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.800 கூடியது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

வெள்ளி விலையும் இன்று 2 முறை உயர்ந்துள்ளது. காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் 3 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.176-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200

17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

18-11-2025- ஒரு கிராம் ரூ.170

17-11-2025- ஒரு கிராம் ரூ.173

16-11-2025- ஒரு கிராம் ரூ.175

15-11-2025- ஒரு கிராம் ரூ.175

14-11-2025- ஒரு கிராம் ரூ.180

Tags:    

Similar News