GOLD PRICE TODAY: தீபாவளி பண்டிகையான இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை
- தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து வருகிறது.
- விளைவில் 1 சவரன் தங்கம் விலை லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவே மாறிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை மாலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கும் , ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீபாவளியை பண்டிகையான இன்று தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்குப் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600
16-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,200
15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880
14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-10-2025- ஒரு கிராம் ரூ.190
17-10-2025- ஒரு கிராம் ரூ.203
16-10-2025- ஒரு கிராம் ரூ.206
15-10-2025- ஒரு கிராம் ரூ.207
14-10-2025- ஒரு கிராம் ரூ.206