GOLD PRICE TODAY : தொடர்ந்து உயரும் தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
- தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
- இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
சென்னை:
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920
04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
06-09-2025- ஒரு கிராம் ரூ.138
05-09-2025- ஒரு கிராம் ரூ.136
04-09-2025- ஒரு கிராம் ரூ.137