வணிகம் & தங்கம் விலை
GOLD PRICE TODAY : புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... மீண்டும் ரூ.80 ஆயிரத்தை தாண்டிய சவரன் விலை
- காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.
- தற்போது தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று இரண்டாவது முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. வார தொடக்கநாளான இன்று காலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10, 060-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வழக்கம்போல் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது நடுத்தர மக்கள் மற்றும் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.