வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை ... ரூ.80 ஆயிரத்தை தாண்டிய சவரன்

Published On 2025-09-06 09:35 IST   |   Update On 2025-09-06 09:39:00 IST
  • நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.3080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 138 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 38ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-09-2025- ஒரு கிராம் ரூ.136

04-09-2025- ஒரு கிராம் ரூ.137

03-09-2025- ஒரு கிராம் ரூ.137

02-09-2025- ஒரு கிராம் ரூ.137

01-09-2025- ஒரு கிராம் ரூ.136

Tags:    

Similar News