GOLD PRICE TODAY : தொடர்ந்து உயரும் தங்கம் விலை... ரூ.78 ஆயிரத்தை நெருங்கும் சவரன்... இன்றைய நிலவரம்
- வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 36ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280
28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
31-08-2025- ஒரு கிராம் ரூ.134
30-08-2025- ஒரு கிராம் ரூ.134
29-08-2025- ஒரு கிராம் ரூ.131
28-08-2025- ஒரு கிராம் ரூ.130