செய்திகள்

இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள்

Published On 2018-08-06 04:22 GMT   |   Update On 2018-08-06 04:22 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன. #royalenfield #continentalgt
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் தீபாவளி சமயத்தில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய தண்டர்பேர்டு மாடல்களை தொடர்ந்து இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாத வாக்கில் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் 650சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.


ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின.

ஏற்கனவே சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ராயல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. #royalenfield #continentalgt
Tags:    

Similar News