செய்திகள்

இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் பஜாஜ் செட்டாக்

Published On 2018-07-21 11:55 GMT   |   Update On 2018-07-21 11:55 GMT
பஜாஜ் நிறுவனத்தின் பிரபல கியர் ஸ்கூட்டராக இருந்த செட்டாக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #bajaj #Scooter



பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பிரான்டு தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனினும், பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் கியர் ஸ்கூட்டர் அந்த காலத்தில் பிரபலமான மாடலாக இருக்கிறது. பின் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்களின் வரவு காரணமாக செட்டாக் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி பஜாஜ் செட்டாக் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் செட்டாக் பிரான்டு 2019-ம் ஆண்டில் மீண்டும் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் செட்டாக் 125சிசி ஸ்கூட்டராக இருக்கும் என்றும் இதன் விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 



புதிய பஜாஜ் செட்டாக் பழைய மாடலின் வடிவமைப்பை தழுவி சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய பஜாஜ் செட்டாக் ஸ்கூட்டரில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த இன்ஜின் 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் அதிக மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய செட்டாக் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட், அலாய் வீல்கள், அதிகளவு ஸ்டோரேஜ் இடவசதி, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் புதிய ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், புதிய பிரிவில் கால்பதிக்கும் முன் சர்வதேச மோட்டார்சைக்கிள் சந்தையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் ராஜிவ் பஜாஜ் 2015-ம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.
 
புகைப்படம் நன்றி: GaadiWaadi.com
Tags:    

Similar News