ஐ.பி.எல்.(IPL)
தளி தொகுதி

பா.ஜனதா- காங்கிரஸ் நேருக்குநேர் மோதும் தளி தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-24 16:13 IST   |   Update On 2021-03-24 16:13:00 IST
பா.ஜனதா - காங்கிரஸ் கட்சிகள் நேருக்குநேர் போட்டியிடும் தளி தொகுதி கண்ணோட்டம்.
அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் நாகேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் டி. ராமச்சந்திரன் களம் காண்கிறார். ஐ.ஜே.கே. சார்பில் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மேரி செல்வராணி, அமமுக கூட்டணியில் கோகுலம் மக்கள் கட்சி சார்பில் எம்.வி. சேகர் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜனதா வேட்பாளர் நாகேஷ்குமார் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 5,00,000
2. அசையும் சொத்து- ரூ. 42,87,000
3. அசையா சொத்து- ரூ. 50,00,000

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராமச்சந்திரன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 30,000
2. அசையும் சொத்து- ரூ. 29,07,174.20
3. அசையா சொத்து- ரூ. 24,24,596

தமிழக- கர்நாடக மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி (தனி) சட்டமன்ற தொகுதி உள்ளது. லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் குளிர் பிரதேசமான தளி தொகுதி காடுகள் மலைகள் மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொண்ட தொகுதியாக திகழ்கிறது.


இத்தொகுதியில் காடுகள் நிறைந்த மலை கிராமங்கள் அதிக அளவில் உள்ளன விவசாய நிலங்கள் ரோஜா தோட்டங்கள் வன விலங்குகள் அதிக அளவில் இருக்கின்றன. சிறு குறு தொழில் சாலைகளும் உள்ளன.

தளி சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தி யாகும் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழைவது இந்த தொகுதியில்தான் ஒகேனக்கல் வழியாக மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட விவசாய நிலங்களை வளம் கொழிக்கச் செய்யும் காவிரி ஆறு ஓடுகிறது.காவேரி ஆற்று நீரை அளக்கும் இடமான பிலிகுண்டுலு இத்தொகுதியில் உள்ளது.



தளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டையில் 5000 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தரவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் உள்ளது உரிகம் அடுத்து நூறொன் து
சுவாமிமலையில் இளநீரில் விளக்கு எரியும் கோயில் உள்ளது மேலும் யாரப் தர்கா சிறப்பு வாய்ந்ததாகும். தளிப்பகுதியில் காய் கறிகள், கீரைகள், மற்றும் மலர்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.



இங்கு விளையும் தக்காளி, பீன்ஸ் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்யப்படுகிறது. அதேபோல் மலர்கள் உற்பத்தியில் இங்கு விளையும் ரோஜா மலர்கள் உலகத்தரம் வாய்ந்தவை ஆகும் அதேபோல் கார்னேஷன், ஜெர்பரா, உள்ளிட்ட அலங்கார மலர்களும் ரோஜாவை போல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கல்வியறிவு இல்லாத மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் முன்னேற்றம் இல்லாத கிராமங்கள், என தமிழக எல்லையல் காட்டுப்பகுதி சூழ இருப்பதால் கவனிப்பாரற்ற இருக்கிறது இந்தத் தொகுதி நாம் பார்த்திராத ஆதிகால கிராமங்கள் இன்னும் நிறைய உள்ளன.



1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இது உத்தனப்பள்ளி தொகுதி 1977-க்கு பிறகு உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டு தளி தொகுதி உதயமானது. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் இந்த தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, என 4 மொழிகள் பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ஆகிய 2 பேரூராட்சிகள் 68 ஊராட்சிகள் கொண்ட தொகுதி இதுவரை 10 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்துள்ளது.

தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தளி சட்டமன்றத் தொகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை ஏற்கனவே இருந்த தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கிராமப் பகுதிகள் இந்த தொகுதி அடங்கியுள்ளன.

தளி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,28, 625 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1,21 ,915 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 39 என மொத்தம் 2,50 ,579 வாக்காளர்கள் உள்ளனர்.

1977 முதல் தற்போது தேர்தல் நடைபெற்ற 2016&ம் ஆண்டு வரை 10 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் ஜனதா கட்சி 1 முறையும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் 1 முறையும் சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் தேசிய கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 2016-ம் ஆண்டு மாநில கட்சியான தி.மு.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

தளி சட்டமன்றத் தொகுதியில் ரெட்டி, நாயுடு, வன்னியர்கள், ஒக்கலிகா, யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிதிராவிடர்கள் எனப் பல சமூக மக்களும் வாழ்கின்றனர்.

தொகுதி பிரச்சனைகள்

மலை கிராமங்களில் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தால் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது மேற்படிப்பிற்காக கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உயர்கல்வி கற்க இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.



மேலும் இந்த பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.

விவசாயம் சார்ந்த தொழில்களே இங்கு பிரதான தொழிலாகும் அறுவடைக் காலங்களில் யானைகள் மற்றும் வன விலங்குகள் தொந்தரவு அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் எனவே யானைக் கூட்டங்களை கட்டுப்படுத்த அரசு மேலும் பல்வேறு இடங்களில் சோலார் மின்வேலி அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது வறண்டு கிடக்கும் ஏரிகளை ஆழப்படுத்தி அகலப்படுத்தி தூர்வாரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

அஞ்செட்டி பகுதியில் தொட்டல்லா அணை கட்டும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் அதை அரசு நிறைவேற்ற வேண்டும் இதனால் இப்பகுதியில் குடிநீர் தேவை மட்டுமின்றி விவசாயத்திற்கும் பயன்பட்டு நிலத்தடி நீரும் உயரும் மேலும் பல கிராமங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புக்கள் அதிக அளவில் இருப்பதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்து வமனையாக உயர்த்த வேண்டும். மலைப்பகுதியில் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்

தளி அருகே அரசு சார்பில் கொய் மலர் உற்பத்தி செய்ய இஸ்ரேல் நாட்டு உதவியுடன் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது ஆனால் சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரோஜா செடி நாற்றங்காலுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஞ்செட்டி யை தலைமையிடமாகக் கொண்டு ஒன்றியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாலுகாவாக மாற்றியது ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

தேன்கனிக்கோட்டை நகரில் உள்ள மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை, ஓசூர் மெயின் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:




1977 ராஜாராம் நாயுடு (காங்கிரஸ்)
1980 ராஜாராம் நாயுடு (காங்கிரஸ)
1984 வேணுகோபால் (காங்கிரஸ்)
1989 விஜயேந்திரய்யா (ஜனதா தட்சி)
1991 வெங்கடராம ரெட்டி (காங்கரஸ்)
1996 ராஜா ரெட்டி (சி.பி.ஐ) 
2001 முரளிதரன் (பா.ஜ.க)
2006 ராமசந்திரன் (சுயேட்சை)
2011 ராமச்சந்திரன் (சி.பி.ஐ)
2016 பிரகாஷ் (தி.மு.க)

Similar News