ஐ.பி.எல்.(IPL)
அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூளகிரி ரவுண்டானா அருகே திறந்த வேனில் நின்றப்படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது கூடியிருந்த, பொதுமக்கள் மத்தியில் அவர் பேச்சை தொடங்கும்போது, ‘‘நாம் ரெடி... நீங்கள் ரெடியா’ என கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
உங்களை தேடி, உங்களை நாடி உரிமையோடு உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தமிழகத்தின் நுழைவு வாயில் என போற்றப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.பி. முனுசாமி, அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கே.பி.முனுசாமியை 30 சதவீதம் கமிஷன் முனுசாமி என்று அழைப்பார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார் கே.பி.முனுசாமி. தற்போது அவர்களிடம் ஓட்டிக்கொண்டு உள்ளார். அவர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை மிரட்டி பதவி வாங்கி உள்ளார். தற்போது ஜெயலலிதாவுக்காக நியாயம் கேட்பதை மறந்து விட்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல், கமிஷன், கரப்ஷன் அதிகமாக நடந்துள்ளது. இவர்கள் செய்த ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். நெடுஞ்சாலை துறை டெண்டர் எடப்பாடி பழனிசாமி சம்மந்திக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போட்டதை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்கு பழனிசாமி தடை உத்தரவு வாங்கி உள்ளார். தடை உத்தரவு வாங்கவில்லை என்றால் இப்போது அவர் சிறையில் தான் இருப்பார். உள்ளாட்சி துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை அமைச்சர் என்று தான் கூற வேண்டும்.
குட்கா மக்களுக்கு தாராளமாக வினியோகம் செய்யும் சூழலை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்படுத்தி போலீஸ் துணையுடன் கொள்ளையடித்தார். தற்போது ஆட்சி முடியும் தருவாயிலும் 3000 முதல் 5000 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
வருகிற சட்டசபை தேர்தலில் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக இருப்பார்கள். தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெல்ல போகிறோம். இந்த உதவாக்கரை ஆட்சிக்கு மக்கள் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. மின்கட்டணம், பால் விலை, பெட்ரோல், டீசல், விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியின் கொடுமையை விட வெயில் பெரிதல்ல என்று நீங்கள் இங்கே நின்று கொண்டு இருக்கிறீர்கள்.
கருணாநிதி வழியில் அவரது மகனான ஸ்டாலின் சொன்னதை தான் செய்வான், செய்வதை தான் சொல்வான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற முதல் தீர்மானமாக நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், 5 பவுனுக்குட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு பணியில் 3 லட்சத்து 50 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கிருஷ்ணகிரி, தேனிகனிக்கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்கு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை தரம் உயர்த்துதல், ஏற்றுமதி மண்டலம், சூரியகாந்தி எண்ணை உற்பத்தி மையம், பர்கூரில் ஜவுளி பூங்கா, என பல்வேறு இடங்களில் பஸ் நிலையம் உள்ளிட்ட வசதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.
இனி இந்த திராவிட மண்ணில் மோடி மஸ்தான் வேலை பலிக்காது.
தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, இழந்த உரிமைகளை பெற நாம் போராடி வெற்றி பெற வேண்டும்.
எனவே இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு அவர் புறப்பட்டு சென்றார். அங்கு நடந்து சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்துக்கு பிரசாரம் செய்ய மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூளகிரி ரவுண்டானா அருகே திறந்த வேனில் நின்றப்படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது கூடியிருந்த, பொதுமக்கள் மத்தியில் அவர் பேச்சை தொடங்கும்போது, ‘‘நாம் ரெடி... நீங்கள் ரெடியா’ என கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
உங்களை தேடி, உங்களை நாடி உரிமையோடு உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தமிழகத்தின் நுழைவு வாயில் என போற்றப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.பி. முனுசாமி, அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கே.பி.முனுசாமியை 30 சதவீதம் கமிஷன் முனுசாமி என்று அழைப்பார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார் கே.பி.முனுசாமி. தற்போது அவர்களிடம் ஓட்டிக்கொண்டு உள்ளார். அவர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை மிரட்டி பதவி வாங்கி உள்ளார். தற்போது ஜெயலலிதாவுக்காக நியாயம் கேட்பதை மறந்து விட்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல், கமிஷன், கரப்ஷன் அதிகமாக நடந்துள்ளது. இவர்கள் செய்த ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். நெடுஞ்சாலை துறை டெண்டர் எடப்பாடி பழனிசாமி சம்மந்திக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போட்டதை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்கு பழனிசாமி தடை உத்தரவு வாங்கி உள்ளார். தடை உத்தரவு வாங்கவில்லை என்றால் இப்போது அவர் சிறையில் தான் இருப்பார். உள்ளாட்சி துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை அமைச்சர் என்று தான் கூற வேண்டும்.
கொரோனா காலத்திலும் அந்த தொற்று நோயை பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மாஸ்க், விளக்குமாறு ஆகியவற்றில் பல கோடி கொள்ளையடித்துள்ளனர். அமைச்சர் வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்ட்டாகவும் ஊழல் செய்வார்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் முந்திரிக் கொட்டை.