ஐ.பி.எல்.(IPL)
கமல்ஹாசன்

ஊட்டி, குன்னூரில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து

Published On 2021-03-19 08:35 IST   |   Update On 2021-03-19 08:35:00 IST
நீலகிரிக்கு கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வர அனுமதி வழங்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஊட்டி:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறும்போது, குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததன் காரணமாக பிரசாரத்தில் அதிகம் பேர் பங்குபெற முடியாது என்ற காரணத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ள நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். ஆனால் நீலகிரிக்கு கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வர அனுமதி வழங்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Similar News