செய்திகள்
கிள்ளியூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் மாற்றம்: புதிய வேட்பாளராக டாக்டர் குமாரதாஸ் அறிவிப்பு
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி த.மா.கா. வேட்பாளரை மாற்றி கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. அதேசமயம், தொகுதிகளின் நிலவரங்களுக்கு ஏற்ப முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை மாற்றி வருகின்றன. அந்த வகையில் த.மா.கா.வில் இன்று கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ‘த.மா.கா. சார்பில் கிள்ளியூர் தொகுதி வேட்பாளராக ஜான் ஜேக்கப் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குப் பதில் டாக்டர் குமாரதாஸ் போட்டியிடுவார்’ என்றார்.