செய்திகள்

முட்டை கொள்முதலுக்கு ஒதுக்கீடு ரூ.4000 கோடி - எப்படி ரூ.5000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கும்? ஜெயக்குமார் கேள்வி

Published On 2018-07-17 13:45 IST   |   Update On 2018-07-17 13:45:00 IST
முட்டை கொள்முதலுக்காக ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், 5000 கோடி ரூபாய்க்கு ஊழல் எப்படி நடந்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். #TNEggsTender #Jayakumar
சென்னை:

தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் அமைச்சர்  ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

தி.மு.க ஆட்சியில் தான் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றன. 100 ரூபாய் கட்டுமானச் செலவு செய்யவேண்டிய இடத்தில் 116 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் கட்ட முதலில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் அதைவிட பலகோடி ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது.

சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில்  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை அரசு வாங்கிக் கொடுக்கும். பாலியல் கொடுமைகள் நடந்தால் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும்.



முட்டை கொள்முதல் தொடர்பான மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனின்  குற்றச்சாட்டு ஆதாரமற்றது. வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் விடுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. முட்டை கொள்முதலுக்கு 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதில் எவ்வாறு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ய முடியும். முட்டை கொள்முதல் விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றி மாற்றி பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #TNEggsTender #Jayakumar
Tags:    

Similar News