செய்திகள்

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல்

Published On 2018-07-09 06:37 GMT   |   Update On 2018-07-09 06:37 GMT
தமிழக சட்டசபையில் இன்று லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். #TNAssembly #LokayuktaBill
சென்னை:

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று வழக்கம் போல் காலை 10 மணிக்கு சபை கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அவர் உரையாற்றி முடிந்ததும் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசினார். அப்போது சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கினார். இதையடுத்து சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.

ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கும் என்பதால் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokayuktaBill 
Tags:    

Similar News