செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் தூக்கி எறியப்படும்- தினகரன்

Published On 2018-06-21 14:59 IST   |   Update On 2018-06-21 14:59:00 IST
அரசின் ஒவ்வொரு துறையும் செயலிழந்து வருவதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு தூக்கி எறியப்படும் என்றும் விருதுநகரில் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran #Edappadipalanisamy
விருதுநகர்:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் இன்று விருதுநகரில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்தால் நல்லது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை வைத்து விசாரிக்கிறது. போலீசார் மீது தான் குற்றச்சாட்டு உள்ளது. அந்த போலீசாரே இதனை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்.

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த ஊர் சேலம் தான். அவரே அங்கு சென்று மக்களை சந்தித்து திட்டத்தை பற்றி கூற வேண்டியது தானே.


இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தமிழக பொருளாதாரம் முன்னேறி விடுமா?

மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்றும், சமூக விரோதிகள் என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.

இந்த ஆட்சி மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. அரசின் ஒவ்வொரு துறையும் செயலிழந்து வருகிறது. விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு தூக்கி எறியப்படும். கடந்த 6 மாதமாக இங்கு இடியமின் ஆட்சி தான் நடக்கிறது.

திண்டுக்கல் சீனிவாசனை எம்.பி, அமைச்சராக்கி அழகு பார்த்தது அம்மா தான். ஆனால் தற்போது அம்மாவை அவர் பழித்து பேசுகிறார். இதை அங்குள்ள மூத்த நிர்வாகிகளும் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalanisamy
Tags:    

Similar News