செய்திகள்

சபையில் சிரிப்பலை ஏற்படுத்திய சபாநாயகர்

Published On 2018-06-04 12:49 IST   |   Update On 2018-06-04 12:49:00 IST
தமிழக சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணியிடம் சபாநாயகர் தனபால் தெரிவித்த கருத்தால் சபையில் சிரிப்பலை எழுந்தது. #TNAssembly #Dhanapal
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது சட்டமன்ற கொறடா சக்கரபாணி, தனது தொகுதியில் உள்ள வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நீங்கள் சபைக்கு வராமல் இருந்த நேரத்தில் 23 வனப்பகுதிகளில் சாலை மற்றும் பல்வேறு வசதிகள் செய்வது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். எனவே உங்கள் பகுதிக்கும் உரிய வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


நீங்கள் வெளியே நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் ஒருநாள் சபாநாயகராக இருந்ததாக கேள்விப்பட்டேன் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், “சபாநாயகராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கும்” என்றார்.

இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது. #TNAssembly #Dhanapal

Tags:    

Similar News