செய்திகள்

மலேசிய பிரதமருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2018-02-26 12:17 IST   |   Update On 2018-02-26 12:17:00 IST
மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
சென்னை:

மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடத்தில் அவர் கூறியதாவது:-

மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரது சிறந்த நிர்வாகத்தில் மலேசிய நாடு முன்னேற்றமடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியதாக இருக்கிறது.

தலைவர் கலைஞர் பற்றியும், தமிழக மக்கள் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் மலேசிய பிரதமர் கேட்டு அறிந்து கொண்டார். நடைபெறவிருக்கின்ற தேர்தலில் மலேசிய பிரதமர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News