செய்திகள்
தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது: எச். ராஜா
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடந்து வருகிறது. இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என பா.ஜ.கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 200 பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. ஓட்டல்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு ஓட்டல்களில் கூடுதலாக ஜி.எஸ்.டி. வரிகள் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“பத்மாவதி” திரைப்படம் ராஜஸ்தான் மாநிலம் சித்தூர் ராணியின் வரலாற்றை படமாக எடுத்துள்ளனர். ஆனால் அதில் ராணியை குறித்து தவறான தகவல்கள் திரித்து கூறப்பட்டுள்ளன.
“பத்மாவதி” திரைப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்து தவறானது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொது மேடைகளில் வரலாற்றை மூடி மறைப்பதும், திரித்துக் கூறவும் கூடாது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடந்து வருகிறது. இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.