செய்திகள்

கருப்பு கண்ணாடி அணிந்து வந்த மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்

Published On 2017-07-06 12:29 IST   |   Update On 2017-07-06 12:30:00 IST
கண்புரை சிகிச்சைக்கு பிறகு கருப்பு கண்ணாடி அணிந்து சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
சென்னை:

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்புரை ஏற்பட்டதன் காரணமாக அவர் சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கண்ணில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லென்சும் பொருத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2 நாட்கள் அவர் வீட்டில் கருப்பு கண்ணாடி அணிந்து ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் 2 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தார்.

சட்டசபையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கை வந்ததால் அந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபைக்கு வந்தார். அப்போது அவர் கருப்பு கண்ணாடி அணிந்து சபைக்கு வந்தார்.


சபாநாயகர் அவரை சிரித்தபடி வரவேற்றார். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் கும்பிட்டார். ஒருவருக்கு ஒருவர் நன்றாக இருக்கிறீர்களா? என்று தலையை அசைத்து செய்கையால் பேசிக்கொண்டனர்.

பின்னர் மு.க.ஸ்டாலினிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். அதன் பிறகு அமைச்சர்களும் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

Similar News