செய்திகள்

அ.தி.மு.க. அரசுடன் மத்திய அரசு இணக்கமாக உள்ளது: அமைச்சர் சீனிவாசன்

Published On 2017-05-27 13:31 IST   |   Update On 2017-05-27 13:31:00 IST
அ.தி.மு.க. அரசுடன் மத்திய அரசு இணக்கமாக உள்ளது என்று திண்டுக்கல்லில் குளங்களை தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்து அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் குளங்களை தூர்வாரும் பணியினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 100 நாள் ஆட்சி செய்து உள்ளது. அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார். 100 நாள் சாதனைகளை போல் இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. சாதனை ஆட்சி நீடிக்கும்.


மத்திய அரசு அ.தி.மு.க. அரசுடன் இணக்கமாக உள்ளது. இந்த பொறாமையால் தான் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க முடியவில்லை என்று ஆதங்கத்துடன் கூறுகிறார். மக்களுக்கு ஸ்டாலின் மீது விருப்பம் இருந்தால்தான் ஆட்சியில் அமரமுடியும். ஆனால் மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை. மக்களும் விரும்பவில்லை.

அ.தி.மு.க. 2 அணிகள் இணைப்புக்கு நாங்கள் 3 மாதமாக இணக்கமாக உள்ளோம். மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் தனியார் பங்களிப்புடன் மழை காலத்துக்குள் தூர்வாரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News