செய்திகள்
சசிகலாவை அமைச்சர் சந்தித்தது தனிப்பட்ட விருப்பம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம். கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆலந்தூர்:
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன். கூட்டத்தில் 85 சதவீத பொருட்கள் மீதான வரிவிதிப்பு நிறைவேறியது. இன்னும் 15 சதவீத பொருட்களுக்கு வரிவிதிப்பு குறித்து ஜூன் 3-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் கொடுத்த கோரிக்கைகளும் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரிவிதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
ஜி.எஸ்.டி யில் உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முடிந்தவரை எல்லோருடைய நலனையும் பாதுகாக்கும் வகையில் மாநில அரசு சார்பில் அழுத்தம் தருகிறோம்.
அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கு ஓ.பி.எஸ். அணியினர் தான் நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த அணியில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி கருத்து கூறி வருகிறார்கள். அது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. எங்களை பொருத்தவரை நாளை அவர்கள் பேச வந்தாலும் கூட நாங்கள் தயார்.
இனி காலத்தின் சூழ்நிலை இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தான். அவர்கள் வைக்கும் கோரிக்கை ஜெயலலிதா மரணம் பற்றியது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதற்கான தீர்வு இருக்கும்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள்.
இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம். கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. கட்சி ரீதியாக யாரும் அவரை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.