செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா பற்றி வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பலாம்: போலீஸ் கமிஷனர்

Published On 2017-04-06 08:37 IST   |   Update On 2017-04-06 08:37:00 IST
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் உதவி மையத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பலாம் என்று போலீஸ் கமிஷனர் கரன்சின்கா அறிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்வதாகவும், அங்கு களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றியும், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் உதவி மையத்திற்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பலாம் என்று போலீஸ் கமிஷனர் கரன்சின்கா அறிவித்துள்ளார்.

99405 99465 என்ற செல்போன் எண்ணிற்கு 24 மணிநேரமும், வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் அனுப்பும் பொதுமக்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Similar News