செய்திகள்

விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-03-18 08:25 IST   |   Update On 2017-03-18 08:25:00 IST
விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை போல் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கப்பெறுகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகள் நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.



தமிழக அரசின் பட்ஜெட்டில் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது. விவசாயிகள் பிரச்சினையில் மாநில அரசு சரியாக அணுகுகிறதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News