செய்திகள்

ஜெயலலிதாவை பார்க்க இதுவரை செல்லாதது ஏன்?: பிரேமலதா விளக்கம்

Published On 2016-11-16 08:30 GMT   |   Update On 2016-11-17 11:21 GMT
அனுமதி அளித்தால் முதல்வர் ஜெயலலிதா உடல்நலத்தை விசாரிக்க விஜயகாந்துடன் நேரில் செல்வேன் என்று பிரேமலதா கூறினார்.
திண்டுக்கல்:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வாக்குசேகரிப்பின் போது விதிமுறைகளை மீறியதாக பிரேதலதா மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆஜராக வந்த பிரேமலதா கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,

இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெற்றால் 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க வெற்றி பெறும். அதிக பணம் பட்டுவாடா நடந்ததால்தான் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தல் ரத்தானது. தற்போது மீண்டும் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. தஞ்சை தொகுதியில் வீடு வீடாக பணபட்டுவாட செய்ததாக அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். தேர்தல் உதவி ஆணையர் இந்த பிரச்சினையை கையில் எடுத்து தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல எல்லாமே ஸ்தம்பித்து உள்ளது. ஜெயலலிதா கடிதம் எழுதியதாக வந்த தகவல் வேடிக்கையாக உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்துடன் நேரில் செல்வேன். மருத்துவர்களை மட்டும் சந்தித்துவிட்டு பேட்டி கொடுக்கும் செயலை நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Similar News