செய்திகள்

தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு திட்டங்களை வாரி வழங்கியவர் ஜெயலலிதா: தளவாய்சுந்தரம் பிரசாரம்

Published On 2016-05-07 18:10 IST   |   Update On 2016-05-07 18:10:00 IST
கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் தென்தாமரை குளம் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இலந்தையடி விளை, எட்டு கூட்டு தேரி விளை, முகிலன் குடியிருப்பு, கோவில் விளை, புவியூர், புன்னையடி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
நாகர்கோவில்:

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆண்டித்தோப்பு, துவாரங்காடு, காட்டுப்புதூர் பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிரசாரத்தின்போது தளவாய்சுந்தரம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நாடே பாராட்டுகிறது. ஏழை பெண்கள் திருமணத்திற்கு 4 கிராம் தங்கத்தில் இருந்து 8 கிராம் தங்கம் வழங்குவதாக அறிவித்துள்ளார். ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் செல்போன், 100 யூனிட் மின்சாரம் இலவசம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். மக்கள் நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். மீண்டும் ஜெயலலிதா முதல்&அமைச்சராவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News