கர்நாடகா தேர்தல்

2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பம் - மம்தா பானர்ஜி

Published On 2023-05-13 23:27 GMT   |   Update On 2023-05-13 23:27 GMT
  • கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
  • அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா:

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.

இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News